பெண்களுக்கு ஆக மருந்தாக விளங்கும் அரிசி வகைகள்..!

பூங்கார் அரிசி: பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதுடன் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரப்பதற்கும் வழி வகுக்கும்.
பிசினி அரிசி: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் உடல் அலுப்பை குறைக்கவும், சுகப்பிரசவம் நடைபெறவும் இந்த அரிசி உதவும்.
குழியடிச்சான் அரிசி: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்.
சூரக்குறுவை அரிசி: பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாடு காரணமாக ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க இந்த அரிசி உதவுகிறது.
குடை வாழை அரிசி: குடல் சுத்தமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என கூறுகிறார்கள்.
காட்டுயானம் அரிசி :மலச்சிக்கல், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயை தடுக்க வல்லது.
தினை அரிசி: உடல் எடையை குறைப்பதுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
காலாநமக் அரிசி: நரம்பு மண்டலம், மூளை, ரத்தம், சிறுநீரகம் ஆகியவை சீராக செயல்பட உதவுகிறது.
Explore