2026ல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் தமிழ் திரைப்படங்கள்!
சினிமா ரசிகர்களுக்கு 2026-ம் ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாக இருக்கப்போகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழித் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகத் தயாராக உள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தளபதி விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்', ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டம்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள, 'பராசக்தி' படமும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.
யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.
ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் ‘பெத்தி’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'ராமாயணம்'. படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.
சூர்யாவின் கம்பேக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்.. 'கருப்பு' திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.