சம்மருக்கு சிறந்த.. சப்போட்டா பழத்தின் சீசன் வந்தாச்சு?
அளவில்லா ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்போட்டாவுக்கு, பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் திறன் உண்டு. அத்தகைய சிறப்பு கொண்ட சப்போட்டா பழத்தின் ஆரோக்கிய நலன்களைத் தெரிந்து கொள்வோம்.
சப்போட்டாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும்.
சப்போட்டா பழத்தில், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் பண்புகள் மிகுந்து காணப்படுகின்றன. இதை பருவகால காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்கும்
நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் சப்போட்டாவைச் சாப்பிடுவது, நம் உடலுக்குப் போதிய ஆற்றலை உடனடியாக அளிக்கும். கோடைகாலத்துக்கு சிறந்த பழமாகும்.
சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சப்போட்டா சிறந்த தேர்வாகும்.
சப்போட்டாவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இது நம் உடல் நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும்.
சப்போட்டா பழத்தில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் இ, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இளமையான தோற்றத்தை தருகிறது.
சப்போட்டா பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை உடலில் வீக்கம் மற்றும் அழற்சி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மைகொண்டது.