இந்த வருடம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள்..ஒரே தமிழ் படம் எது தெரியுமா?

இந்த ஆண்டு பல பெரிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின. தொடர்ந்து இந்தாண்டில், ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்த படங்களின் பட்டியல் இதோ:-
சையாரா: இந்த ஆண்டு வெளியான 'சையாரா' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படமும் ரூ. 500 கோடி கிளப்பில் நுழைந்தது.
'காந்தாரா: சாப்டர் 1': ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: சாப்டர் 1' சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படத்தின் வசூல் சுமார் ரூ.900 கோடி.
கூலி: விமர்சனங்கள் இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூலித்தது ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம்
சாவா: விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'சாவா' இந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. படம் உலகளவில் ரூ. 807 கோடி வசூலித்தது.
துரந்தர்: இந்த ஆண்டில் வெளியான ஒரே ரூ.1,000 கோடி படம் என்று சாதனை படைத்தது 'துரந்தர்'
2025-ம் ஆண்டு திரையுலகிற்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. சிறிய, பெரிய படங்கள் என்ற பாகுபாடின்றி, நல்ல கதையம்சத்துடன் வந்த அனைத்து படங்களையும் மக்கள் கொண்டாடினர்.
Explore