இந்தாண்டு ரசிகர்களை கட்டிப்போட்ட வெப் சீரிஸ்..மிஸ் பண்ணக்கூடாத தரமான தொடர்கள்!
ஹார்ட் பீட் சீசன் 2: ஜியோ ஹாட்ஸ்டாரில் மே 22ஆம் தேதி வெளியான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நடு சென்டர்: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த தொடர், ஸ்கூல் பாஸ்கெட்பால் டீம் உருவாக்கும் போராட்டத்தை சித்தரிக்கிறது.
மதுரை பையனும் சென்னை பொண்ணும்: ஆஹாவில் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்த தொடர், வேறுபட்ட உலகங்களில் இருந்து வரும் இருவரின் லவ் ஸ்டோரியை சொல்கிறது.
ஆபிஸ்: ஹாட்ஸ்டாரின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடராக ஆபிஸ் வெளியானது. பிராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓம் காளி ஜெய் காளி: ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28ஆம் தேதி வெளியான இந்த தொடர், ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சூழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 2: 2022 ஆம் ஆண்டு வெளியான சூழல் வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அத்தொடரின் இரண்டாவது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.
வேடுவன்: இந்த வெப் தொடர் ஜீ5இல் வெளியானது. கிரைம், சைக்காலஜிக்கல் தொடராக வெளியான வேடுவன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
குற்றம் புரிந்தவன்: சோனி லிவ்வில் வெளியான குற்றம் புரிந்தவன் தொடர், ட்விஸ்ட்கள், சஸ்பென்ஸ், சைக்காலஜிக்கல் என கிரைம் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த தொடர் அமைந்தது.