2025ம் ஆண்டு இந்தியர்கள் அதிகம் பயணித்த நாடுகள் இவைதான்!

Photo: wikipedia
பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். சுமார் 7.78 மில்லியன்(77 லட்சம்) இந்தியர்கள் இந்த ஆண்டு அமீரகத்திற்குப் பயணம் செய்துள்ளனர்.
Photo: wikipedia
இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா உள்ளிட்ட புனிதப் பயணங்கள் மட்டுமின்றி, தொழில் மற்றும் குடும்பப் பயணங்களுக்காகவும் சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் இந்தாண்டு இங்கு சென்றுள்ளனர்.
Photo: wikipedia
சுற்றுலா, கல்வி மற்றும் குடும்ப உறவுகளை இந்தியர்கள் சந்திக்கச் செல்வதில் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Photo: wikipedia
நான்காவது தாய்லாந்து. குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.
Photo: wikipedia
ஐந்தாவது சிங்கப்பூர். பாதுகாப்பு, எளிதான போக்குவரத்து மற்றும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய இடங்கள் அதிகம் இருப்பதால், சிங்கப்பூர் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
Photo: wikipedia
ஆறாவது பிரிட்டன். லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் காணவும், கல்வி மற்றும் வணிக ரீதியாகவும் இந்தியர்கள் பிரிட்டனை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
Photo: wikipedia
ஏழாவது கத்தார். கத்தாரின் எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் மற்றும் தோஹா வழியாகச் செல்லும் சர்வதேச விமான இணைப்புகள் காரணமாக, இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது.
Photo: wikipedia
எட்டாம் இடத்தில் கனடா. சுற்றுலா மற்றும் அங்கு குடியேறியுள்ள உறவினர்களைச் சந்திக்கச் செல்வதற்காகக் கனடா இப்போதும் இந்தியர்களின் விரும்பும் நாடாகவே நீடிக்கிறது.
Photo: wikipedia
Explore