ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்வது, அமில வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் தொண்டையில் எரிச்சலை அதிகப்படுத்தும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தக்கூடியது என்பதால் குளிர் காலத்தில் சாப்பிடுவது தவறில்லை.
சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட பிறகு ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது. அது இருமலை அதிகப்படுத்திவிடக்கூடும். அதாவது சளி, இருமல் வராமல் தடுப்பதற்காக சாப்பிடலாம்.
ஆரஞ்சுப் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆரஞ்சு இரைப்பை, குடலை சுத்தம் செய்து செரிமானத்தை அதிகரிக்க செய்யவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.
ஆரஞ்சு இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இதயத்திற்கு சிறந்த டானிக்காகவும் கருதப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தில் இரும்பு சத்து அதிக அளவு இல்லாவிட்டாலும் கூட உடலில் இரும்பு சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். இரும்பு சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து கண்களுக்கு நலம் சேர்க்கக்கூடியது. இயற்கை வழங்கும் புளிப்பு பழங்களில் ஆரஞ்சு சிறந்ததாக கருதப்படுகிறது, குறிப்பாக குளிர்காலத்தில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது.