பாடாய்படுத்தும் வாயு தொல்லைக்கு என்ன தீர்வு?

அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
freepik
குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் (Fermentation) காரணமாகவே வாயு ஏற்படுகிறது.
freepik
மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும். கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும். உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம்.
freepik
குடற்பகுதியில் வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரைகளின் விளைவாகவும் குடற்பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
freepik
சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் கூடும்போதும் (Small Intestinal Bacterial Overgrowth) வாய்வுப் பிரச்சினை உண்டாகும்.
பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம்.
freepik
வாயுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது. வாயு நிரப்பப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள், குடலில் வாயுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.
freepik
பாலில் உள்ள 'லாக்டோஸ்' (Lactose) சிலருக்கு வாயுப் பிரச்சனையை உருவாக்கலாம். பழங்களில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ (Fructose) மற்றும் செயற்கை சுவையூட்டிகளில் உள்ள ‘சார்பிடால்’ (Sorbitol) போன்றவற்றைச் செரிக்க முடியாத போதும் வாயுப் பெருக்கம் உண்டாகும்.
எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், உடலுக்கு அதிக நன்மை செய்வதாயிருப்பினும் சிலருக்கு வாயுவை உருவாக்கலாம்.
freepik
Explore