பழங்களை எப்போது எடுத்துக்கொள்வது நல்லது?

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் நம்மில் பலருக்கும் உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
இது மிகவும் தவறான உணவு பழக்கம். ஏனெனில் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த பழங்களும் எடுத்து கொள்ளக் கூடாது.
உணவுக்கு பிறகு பழங்களை எடுத்து கொள்வதால், செரிமான பிரச்சினை உண்டாக்கும். உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல், ஊட்டச்சத்துகள் முழுமையாக உணவில் இருந்து உடலுக்கு கிடைக்காது.
விரைவில் செரிமானமாகிவிடும் பழங்கள், மற்ற உணவுகளோடு சேர்ந்து செரிமானத்துக்கு ஆட்படும்போது, செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன.
உணவின் மூலம் கிடைத்த சர்க்கரையுடன் பழத்தின் மூலம் கிடைக்கும் சர்க்கரையும் கூட்டு சேர்ந்து, ரத்தச் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும்.
இதன்முலம் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்போ, அல்லது உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகோ பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பழங்களைச் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். மூளையின் செயல்திறன் கூடும். சருமத்தின் மினுமினுப்பைக் கூட்டும்.
அதன் பலன்களைப் பெற, அதை எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதனால் எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும், எந்தளவு சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடுங்கள்.
Explore