தக்காளி சாஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா?
freepik
பாட்டிலில் அடைக்கப்பட்ட தக்காளி சாஸ்களில் அவை கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக அளவில் பதப்படுத்திகளும் ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன.
freepik
தக்காளி சாஸில் அதிகமாக சர்க்கரை, உப்பு, கார்ன் சிரப், பிரக்டோஸ் மற்றும் வேறு சில பதப்படுத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பல்வேறு தீமைகள் உடலில் ஏற்படலாம்.
freepik
தக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
freepik
தக்காளி சாஸில் அதிக அளவில் சர்க்கரையும் மற்ற பதப்படுத்திகளும் சேர்க்கப்படுகின்றன. இது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
metaAI
தக்காளி சாஸ் அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு உடலில் நிறைய அலர்ஜி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
metaAI
தக்காளி சாஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இதயம் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்கக்கூடும்.
metaAI
உணவில் அதிக அளவில் பதப்படுத்திகள் சேர்க்கப்படுவதால், இது மூட்டுவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
metaAI
தக்காளி சாஸில் அதிக அளவில் சோடியம் சேருவதால், இது சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தூண்டுகிறது.