ஆமாங்க..வாரம் இரண்டுமுறை சுண்டைக்காய்..என்னனு உள்ள வந்து பாருங்க.!!

ஆமாங்க..வாரம் இரண்டுமுறை சுண்டைக்காய்..என்னனு உள்ள வந்து பாருங்க.!!

Published on
சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச் சுண்டை.
இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகின்றன. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.
சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் லேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com