metaAI
metaAI

ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு உருளைக்கிழங்கு சமோசா செய்யலாம் வாங்க...!

Published on
தேவையான பொருட்கள் : மைதா மாவு - 200 கிராம் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப,எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
metaAI
செய்முறை : மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடங்கள் தனியாக மூடி வைக்கவும்.
metaAI
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
metaAI
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
metaAI
அடுத்து அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.
metaAI
பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
metaAI
வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.
metaAI
அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும். இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.
metaAI
ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்!
metaAI

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com