

கிருஷ்ணகிரி, டிச.10-
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி உருவப்படத்துக்கு பல்வேறு தரப்பினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
முப்படை தளபதி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அருடைய மனைவி உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள காமராஜர் சிலை அருகில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ரகமத்துல்லா முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் அக.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் தகி, சரவணன், துணைத்தலைவர்கள் பன்னீர்செல்வம், ஷானவாஸ், வட்டார தலைவர் சித்திக், மாவட்ட ராகுல் பேரவை தலைவர் விஜயராஜ், சசிகுமார், மற்றும் நிர்வாகிகள் அஜிசுல்லா, சரவணன், கனகராஜ், முருகன், குமரவேல், டேனியல் சக்கரவர்த்தி, துரைசாமி, ஷபீக் அஹமத் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஓசூரில்...
ஓசூர் பாகலூர் சாலையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவகத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணைசெயலாளர் கே.மதன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் எம்.ராமு, விசுவநாதரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓசூர் எம்.ஜி.ரோடில் காந்தி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி, பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசலு, மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், முருகன், அம்மன் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதா சார்பில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர தலைவர் பார்த்திபன், மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கநாத், கோட்ட அமைப்பு செயலாளர் நாராயணன், மாவட்ட செயலாளர் புட்டராஜ், நகர பொதுச்செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஸ்ரீனிவாசன், பொருளாளர் அருண்குமார், வர்த்தக அணி மாவட்ட தலைவர் வெங்கட், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பாபு, இளைஞரணி நகர தலைவர் கோபி, நகர செயலாளர்கள் சரவணன், விஜயகுமார், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டு பிபின் ராவத் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பிபின் ராவத் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நேற்று நடந்தது. பா.ஜனதா முன்னாள் ராணுவ பிரிவு நிர்வாகி பாலு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தர்மலிங்கம், பிபின் ராவத் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன், நகர தலைவர் ரமேஷ், பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.