காய்கறி கடையில் பணம் திருடிய பிளம்பர் கைது

திருபுவனை அருகே காய்கறி கடையில் பணம் திருடிய பிளம்பரை போலீசார் கைது செய்தனர்.
காய்கறி கடையில் பணம் திருடிய பிளம்பர் கைது
Published on

திருபுவனை

மதகடிப்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 43).இவர் மதகடிப்பட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். வழக்கமாக இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 11-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சரவணன் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கடைக்கு வந்தபோது, அங்கு கடையின் கதவை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பாரில் மது குடித்துக் கொண்டிருந்த கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த பிளம்பர் முருகன் (41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரத்து 400 கைப்பற்றப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com