துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

கதக்கில் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
Published on

கதக்:

கதக் மாவட்ட கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் போலீஸ்காரர் கிரண் கொப்பா என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது ஷிப்ட் பணியை முடித்துவிட்டு கிரண் கொப்பா வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டுக்கு செல்லும் வழியில் கிரண் கொப்பா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கதக் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக கிரண் கொப்பா மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com