

கந்தர்வகோட்டை,மே.19-
கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறுகின்ற மங்களா கோவில், வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி, கல்லாக்கோட்டை, ஆத்தியடிபட்டி, நெப்புகை, வேலாடிப்பட்டி, அண்டனூர், கண்ணுகுடிபட்டி, கொல்லம்பட்டி, ராசாபட்டி, முள்ளிக்காய்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (புதன்கிழமை), 20-ந்தேதி மற்றும் 26, 27-ந் தேதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.