மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா
Published on

பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்.மாணிக்கவேல் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடித்திருக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நடனம் அமைப்பதை பிரபுதேவா ஒரு நாளும் நிறுத்தியதே இல்லை.

இந்தியில், தெலுங்கு என்று முன்னணி கதாநாயகர்களுக்கு நடனம் அமைத்துத்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். குறிப்பாகத் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு இவர் நடனம் அமைத்தால் அது தனியாகத் தெரியும். ரசிகர்களின் பலத்த வரவேற்பும் கிடைக்கும்.

இந்த மார்க்கெட்டை வைத்து விஜய்யின் அடுத்த படத்திற்கு பிரபுதேவாவை நடனம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய், போக்கிரி மற்றும் வில்லு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com