பரமத்திவேலூர் ஏலமார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

பரமத்திவேலூர் தாலுகாவில் தண்ணீர்பந்தல், பெரியசோளிபாளையம், பொன்மலர்பாளையம், சாணார்பாளையம்
பரமத்திவேலூர் ஏலமார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
Published on

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் தாலுகாவில் தண்ணீர்பந்தல், பெரியசோளிபாளையம், பொன்மலர்பாளையம், சாணார்பாளையம், பெரியமருதூர் ஆகிய பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் பூக்களை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக பரமத்திவேலூரில் உள்ள தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். பூக்களை ஏலம் எடுப்பதற்கு பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகிறார்கள்.

பரமத்தி வேலூரில் கடந்த 13ந் தேதி நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை பூ (ஒருகிலோ) ரூ.350க்கும், செவ்வந்தி பூ ரூ.200க்கும், அரளி பூ ரூ.180க்கும், சம்பங்கி பூ ரூ.150க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை பூ (ஒருகிலோ) ரூ.500க்கும், செவ்வந்தி பூ ரூ.230க்கும், அரளி பூ ரூ.220க்கும், சம்பங்கி பூ ரூ.200க்கும் ஏலம் போனது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com