தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ரேஷன் பொருட்களை சரியான அளவில் வழங்கக்கோரி திருவிடைமருதூர் வட்டார பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருவிடைமருதூர்,

ஆர்ப்பாட்டம்

ரேஷன் பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் திருவிடைமருதூர் அருகே பெரப்படியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராம்ஜி உள்பட திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் திருபுவனத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு பேரூர் செயலாளர் எஸ்.கே.பஞ்சநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சுந்தரசெயபால், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பி.முனியசாமி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.மணிமாறன் உள்பட திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

ஆடுதுறை

ஆடுதுறை அருகே உள்ள கீழமருத்துவக்குடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு கோவி.செழியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேரூர் செயலாளர் கோ.சி.இளங்கோவன் உள்பட தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

பழவாத்தான்கட்டளை ஊராட்சி விவேகானந்தா நகரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

திருப்பனந்தாள்

திருப்பனந்தாள் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரேஷன் பொருட்களை சரியான அளவில் வழங்கக்கோரி திருப்பனந்தாள் , பந்தநல்லூர், அணைக்கரை, குறிச்சி, பாலாக்குடி, திருகோடிக்காவல், கதிராமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ கோவி.செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கோ.ரவிச்சந்திரன், கோ.க.அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி, துரை, இளைஞர் அணி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com