சிறுமிக்கு பாலியல் தொல்லை தனியார் நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை தனியார் நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பாண்டூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பெர்னாட்ஷா ராஜ்குமார் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பெர்னாட்ஷா அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் சொன்னால் அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெர்னாட்ஷா ராஜ்குமாரை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

மேலும் அவர்கள் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக தனலட்சுமி வாதாடினார். வாதங்கள் முடிவடைந்து நேற்று நீதிபதி பரணிதரன் தீர்ப்பளித்தார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பெர்னாட்ஷா ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் பரிந்துரை செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com