பி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை 26 பேர் பணிநீக்கம்

பி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட 26 பேருக்கு மீண்டும் பணி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பி.ஆர்.டி.சி. டிரைவர்கள் இதுவரை 26 பேர் பணிநீக்கம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலைய்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. 13 ஆண்டுகளாக பணி செய்யும் மகளிர் கண்டக்டர் 12 பேரும், 8 ஆண்டுகளாக பணி செய்யும் தினக்கூலி ஊழியர்கள் 4 பேரும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 12 டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் கடந்த ஜூலை மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட 26 டிரைவர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு காலத்தோடு சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com