தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் புஷ்பா.. வைரலாகும் போஸ்டர்

புஷ்பா -தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் புஷ்பா.. வைரலாகும் போஸ்டர்
Published on

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'புஷ்பா -தி ரூல்' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ யூ டியூபில் 64 மில்லியன் பார்வையாளர்களையும் 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com