கத்தார் 2022 உலகக் கோப்பை.. ஆட்டம் பாட்டத்தோடு ரசிகர்கள் ஆரவாரம்

தொடக்க போட்டிக்கு முன்னதாக ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தோகாவில் குவிந்தனர்
Published on

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் உள்ள 60 அயிரம் இருக்கைகள் வசதி கொண்ட அல் பேத் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.

தொடக்க லீக் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னதாக போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.தென்கொரியாவை சேர்ந்த பி.டி.எஸ். இசைக்குழுவினரின் ஆட்டம் பாட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தொடக்க போட்டிக்கு முன்னதாக ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தோகாவில் குவிந்தனர்.ரசிகர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com