கூத்தாநல்லூர் அருகே கிராம பகுதிகளில் பரவலாக மழை

கூத்தாநல்லூர் அருகே கிராம பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
கூத்தாநல்லூர் அருகே கிராம பகுதிகளில் பரவலாக மழை
Published on

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் அருகே கிராம பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கோடை மழை

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் வீடுகளில் மின்விசிறியில் இருந்து அனல் காற்று வீசும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இரவு நேரங்களில் இயற்கையான காற்றே இல்லாமல், புழுக்கம் நிலவி வருகிறது.

அக்னி நட்சத்திரம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வழக்கம்போல் கடுமையான வெயில் சுட்டெரித்தது. இரவில் கடுமையான புழுக்கம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் இந்த மழை நீடித்தது. கூத்தாநல்லூர் மட்டுமின்றி லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ராநல்லூர், மரக்கடை, வேளுக்குடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர், பழையனூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் அந்த பகுதியில் குளிர்ச்சி நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com