கே.ஜி.எஃப்2 படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்

யாஷ் நடிப்பில் உலகமுழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கே.ஜி.எஃப் 2 படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
கே.ஜி.எஃப்2 படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்
Published on

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2 . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்த்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூரை தொலைபேசியின் மூலம் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், நடிகர் யஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com