விமான நிலையத்தில் நடிகர் ராம் சரணை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்

விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குச் செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று ராம் சரணுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் நடிகர் ராம் சரணை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்
Published on

அமராவதி,

ராம் சரண் தனது வரவிருக்கும் திரைப்படமான ஆர்சி 15 படப்பிடிப்பில் பங்கேற்க ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு புறப்பட்டார். அவர் ராஜமுந்திரியில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், அவரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர். வெளியே வந்த அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அங்கிருந்து ஓட்டலுக்கு செல்லும் வழியெல்லாம் அவரது ரசிகர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் திரு, எடிட்டர் ஷமீர் முகமது மற்றும் இசையமைப்பாளர் எஸ் தமன் பணியாற்றியுள்ளனர்.

இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், பல வருடங்களுக்கு முன்பே இந்த அரசியல் கதையை எழுதி வைத்திருந்தேன். ஷங்கர் சார் இந்த படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் கதையை அவரிடம் கொடுத்தபோது அவர் அதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. என கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com