தீவிர உடற்பயிற்சியில் ராஷ்மிகா

ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் முயற்சி மற்றும் அதற்கான உழைப்பு திரைத்துறையில் இருக்கும் நிறைய பெண்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.
தீவிர உடற்பயிற்சியில் ராஷ்மிகா
Published on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர், ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட படங்களைத் தொடர்ந்து தமிழில் `சுல்தான்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

ராஷ்மிகா உடல்நலனில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் உடற்பயிற்சிகளில் அவர் மிகவும் மெனக்கெடுகிறார். நண்பர்களிடமும் உடற்பயிற்சி குறித்த தகவல்களை ஆர்வமாக கேட்கிறாராம்.

படப்பிடிப்பு போலவே சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ராஷ்மிகா, தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சியின் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com