ரியல்மி சி 53 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி சி 53 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ரியல்மி நிறுவனம் சி 53 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.74 அங்குல ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் யுனிசாக் டி 612 ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ள இதன் நினைவகத் திறனை 2 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். இதன் பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. மேலும் இரண்டு சிம்கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக மாடல் விலை சுமார் ரூ.9,999.

6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவக மாடல் விலை சுமார் ரூ.10,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com