ரியல்மி ஜி.டி. நியோ 5 எஸ்.இ.

ரியல்மி நிறுவனம் புதிதாக ஜி.டி. நியோ 5 எஸ்.இ. என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி ஜி.டி. நியோ 5 எஸ்.இ.
Published on

இது 6.7 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி., 12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. நினைவகம் உடையதாகவும் வந்துள்ளது. நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதியும் கொண்டது.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 5,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 100 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.25,095.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com