ரெட்மி நோட் 12

ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி தற்போது நோட் 12 என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி நோட் 12
Published on

இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டதாகவும், 256 ஜி.பி. நினைவகம் உடையதாகவும் இது வந்துள்ளது. நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. தூசி, நீர் புகா தன்மை கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.21,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com