தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

மணவெளி தொகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண நிதியை சபாநயகர் செல்வம் வழங்கினார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்
Published on

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதிபூரணாங்குப்பம் தெற்கு வீதி சேர்ந்தவர் ஆனந்த். இவரது வீட்டின் மாடியில் தனம் (வயது 70) என்பவர் குடிசை அமைத்து வசித்து வந்தார். சம்பவத்தன்று அந்த குடிசையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தனத்துக்கு வருவாய்த்துறை சார்பில் ரூ.8 ஆயிரத்து 900 மற்றும் சபாநாயகர் செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பிரேம் பிரகாஷ், பா.ஜ.க. மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, பொதுச்செயலாளர் சக்திபாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், திருவேங்கடம் மணி, திருஞானம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com