சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்ட தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிச்சாமி, வட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், வட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com