அவருடன் காட்சி இல்லாதது வருத்தம் - பூஜா ஹெக்டே

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் சத்யராஜ் பற்றி பேசியிருக்கிறார்.
அவருடன் காட்சி இல்லாதது வருத்தம் - பூஜா ஹெக்டே
Published on

யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ராதே ஷ்யாம். இப்படத்தில் பிரபாஸ் நாயகனாகவும், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குனர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் நடிகை பூஜா ஹெக்டே பேசும்போது, நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது. இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம், பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம். பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார். மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com