சிட்கோ சார்பில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 158 வீடுகள் விற்பனை

சிட்கோ சார்பில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 158 வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
சிட்கோ சார்பில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 158 வீடுகள் விற்பனை
Published on

மும்பை,

சிட்கோ சார்பில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 158 வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

வீடுகள் விற்பனை

மாநில அரசின் நகர திட்டமிடல் மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம் (சிட்கோ) வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதில் சிட்கோ சார்பில் நவிமும்பையில் பகுதியில் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 158 வீடுகள், 245 கடைகளை சிட்கோ விற்பனை செய்ய உள்ளது.

இந்த வீடுகள் துரோநகரி, கலம்பொலி, தலோஜா, கார்கர் நோடு ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 245 கடைகளும் உள்ளன.

ஏழைகளுக்காக...

இதுதவிர நெருல், ஜூயிநகர் ரெயில்நிலைய பகுதியில் தலா 3 வணிக வளாகங்களும் சிட்கோவால் கட்டப்பட்டுள்ளது.

இதில் 404 வீடுகள் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்துக்காக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com