கேலக்ஸி எம் 14 ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எம் 14 மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி எம் 14 ஸ்மார்ட்போன்
Published on

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி தயாரிப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட 3 கேமராக்கள் பின்புறமும், முன்புறம் செல்பி பிரியர்களுக்கென 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. நீடித்து செயல்படும் வகையில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள கேமரா மூலம் புகைப்படக் கலைஞர்களுக்கு நிகராக காட்சிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் எடுக்க முடியும். விரைவாக சார்ஜ் ஆக 25 வாட் சார்ஜர், 6.6 அங்குல முழு ஹெச்.டி. திரை உள்ளது. இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 2 நாட்கள் வரை செயல்படும். கொரில்லா கிளாஸ் 5, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சில்வர், நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும். கேலக்ஸி எம் 14 மாடலின் விலை சுமார் ரூ.13,490. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.14,990.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com