சில மணி நேரத்தில் யூடியூப்பில் வெளியான சாணிக் காயிதம்.. படக்குழுவினர் அதிர்ச்சி

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிவுள்ள சாணிக் காயிதம் படம் வெளியான சில மணி நேரத்தில் யூடியூப்பில் லீக் ஆகியுள்ளது.
சில மணி நேரத்தில் யூடியூப்பில் வெளியான சாணிக் காயிதம்.. படக்குழுவினர் அதிர்ச்சி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணிக் காயிதம்' படத்தில் செல்வராகவன் நடித்து முடித்துள்ளார். இதில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வன்முறை காட்சிகள் அதிகளவில் உள்ளதால் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படம் இன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.

இந்நிலையில், இன்று ஓடிடி-யில் வெளியான சாணிக் காயிதம் திரைப்படம், வெளியான சில மணி நேரத்திலேயே யூடியூப்பில் லீக் ஆகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com