தனியார் பள்ளியில் தீ விபத்து

தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் பள்ளியில் தீ விபத்து
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் டி.வி.எஸ். கார்னர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆய்வகத்தில் ஒரு கணினி மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. அந்த அறையில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பக்கத்து அறையில் இருந்த மாணவ-மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com