

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள பொம்மனூரை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் செல்லக்கிளி (வயது14). சிறுமி ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்ற மாணவி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாள். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.