

சிவகிரி, மே:
சிவகிரியில் மண்டல துணைத் தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, உதவியாளர் அழகுராஜா, சிவகிரி நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன், சுகாதார ஆய்வாளர் நவராஜ், சுகாதார மேற்பார்வையாளர் குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் சிவகிரி நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகிரியில் தென்காசி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழைய போலீஸ் நிலையம் அருகே விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த மயில்சாமி மகன் பிரகாஷ் என்பவர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஜவுளிக்கடையை திறந்துவைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட அதிகாரிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.