ரைசிங் தூத்துக்குடி திட்டத்தில் தகுதியான படித்த இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவதற்கான ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை நடத்தி வருகிறது.