கதை எழுதும் பிசியில் செல்வராகவன்.. வைரலாகும் பதிவு..

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது பகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கதை எழுதும் பிசியில் செல்வராகவன்.. வைரலாகும் பதிவு..
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது" என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சீக்கிரம் ஸ்கிரிப்ட் எழுதி முடியுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com