மாநிலங்களவை எம்.பி. தேர்தல்:- சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைப்பு

மாநிலங்களவை எம்.பி. தேர்தலையொட்டி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
மாநிலங்களவை எம்.பி. தேர்தல்:- சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைப்பு
Published on

மும்பை, 

மாநிலங்களவை எம்.பி. தேர்தலையொட்டி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

ஓட்டலில் தங்க வைப்பு

மராட்டியத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதில் 6-வது எம்.பி. பதவியை கைப்பற்ற சிவசேனா, பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிப்பதை தடுக்க சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்கள் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் இன்று தென்மும்பையில் உள்ள ஷயாத்திரி விருந்தினர் மாளிகையில் இருந்து 2 பஸ் மூலம் மேற்கு புறநகா பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

உத்தவ் தாக்கரே சந்திக்கிறார்?

அவர்களை நாளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

இதேபோல பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com