இதய அறுவை சிகிச்சை செய்துள்ள பசவராஜ் பொம்மையிடம் நலம் விசாரித்த சித்தராமையா

இதய அறுவை சிகிச்சை செய்துள்ள பசவராஜ் பொம்மையிடம் முதல்-மந்திரி சித்தராமையா நலம் விசாரித்தார்.
இதய அறுவை சிகிச்சை செய்துள்ள பசவராஜ் பொம்மையிடம் நலம் விசாரித்த சித்தராமையா
Published on

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மூட்டு வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 17-ந்தேதி பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மை சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை முதல்-மந்திரி சித்தராமையா சென்றார். பின்னர் அவர், பசவராஜ் பொம்மையை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை பற்றி சித்தராமையா கேட்டு அறிந்தார். மேலும் கூடிய விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என்று பசவராஜ் பொம்மையிடம் தெரிவித்து விட்டு முதல்-மந்திரி சித்தராமையா, அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com