ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?

தனுஷின் பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?
Published on

சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது முசாபிர் மியூஸிக் ஆல்பம் வீடியோ வேளைகளை ஆரம்பித்து அது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா துறையில் தனுஷுக்கு நேர்எதிர் போட்டியாளராக கருதப்படும் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கப்போவதாக வரும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com