சிறப்பு குறைதீர்வு முகாம்

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) தனது இருவார விழாவினை முன்னிட்டு சிறப்பு குறைதீர்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்த இருக்கிறது.
சிறப்பு குறைதீர்வு முகாம்
Published on

புதுச்சேரி

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக புதுச்சேரி நகர கிளை மேலாளர் ஜவகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி.) தனது இருவார விழாவினை முன்னிட்டு நீடராஜப்பையர் வீதியில் உள்ள நகர கிளை அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாமை நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 7-ந்தேதியில் காலை 10.30 மணிமுதல் 11.30 மணி வரையிலும், சிறப்பு குறைதீர்வு முகாம் (சிறப்பு சுவிதா சமாகம்) வருகிற 1 மற்றும் 9-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட முகாம்களில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோர் நகர கிளை அலுவலகத்துக்கு நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com