சாதி மத பேதமின்றி மெய்வழிச்சாலையில் நடக்கும் சமத்துவ பொங்கல் விழா


சாதி மத பேதமின்றி மெய்வழிச்சாலையில் நடக்கும் சமத்துவ பொங்கல் விழா
x

பொன்னரங்க ஆலயத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.

தைத் திருநாளான பொங்கல் பண்டிகையானது, தமிழர்களின் திருநாளாக, அனைத்து மதம் மற்றும் சாதியினரும் கொண்டாடும் விழாவாகும். இதற்கு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை கிராமம் விளங்குகிறது.

அனைத்து மதம் மற்றும் சாதியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இறந்த பிறகு அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப எமதர்மன் நரகம் மற்றும் சொர்க்கத்திற்கு அனுப்புவார் என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அனைவரும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் மெய்வழிச்சாலை என்பது தொடங்கப்பட்டது என கூறுகின்றனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதற்கு இணங்கவும் மெய்வழிச்சாலை கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மதத்தை பிரிக்காமலும் 69 சாதியினரும் சாதி மத பேதமின்றி வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பொன்னரங்க ஆலயத்தில், பொங்கல் பண்டிகையை இவர்கள் ஒன்றுகூடி சமத்துவ பொங்கலாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். மெய்வழிச்சாலையில் வசித்து வரும் 69 சமூகத்தினரும், இன பாகுபாடின்றி தமிழர்களின் பாரம்பரிய உடையான பஞ்ச கச்சை, தலைப் பாகை அணிந்து பங்கேற்கின்றனர். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள், வேலை நிமித்தமாக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் பொங்கல் அன்று அனைவரும் ஊருக்கு வந்துவிடுவார்கள்.

1 More update

Next Story