தேரூர் புதுக்கிராமம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தேரூர் புதுக்கிராமம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

தேரூர் புதுக்கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உதய மார்த்தாண்ட விண்ணகர எம்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி காலையில் பெருமாளுக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள்பொடி, மாபொடி, இளநீர், பன்னீர், சந்தனம், களபம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

அதன் பிறகு மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எம்பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருள செய்து ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு வாகன பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com