காமன்வெல்த் பேட்மிண்டன் : கலப்பு அணி பிரிவில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

தொடக்க ஆட்டத்தில் கலப்பு அணி பிரிவில் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது..
Image Courtesy : Olympic Khel Twitter 
Image Courtesy : Olympic Khel Twitter 
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

இதில் பேட்மிண்டன் தொடக்க ஆட்டத்தில் கலப்பு அணி பிரிவில் இந்தியா 5-0  என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது..

முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் அஷ்வினி ஜோடி 21-9 21-12 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியின்'முஹம்மது இர்பான் சயீத் பட்டி , கஜாலா சித்திக் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அடுத்து இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் முராத் அலியை 21-7 21-12 என்ற கணக்கில் எளிதாக வென்றார்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் மஹூர் ஷாசாத்தை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். 21-7 21-6 என்ற  கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

பின்னர் இந்திய இணை, ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஆகியோர் 21-12 21-9 என்ற கணக்கில் முராத் அலி, எம்.டி.ஐ.எஸ் பட்டி இணையை  வீழ்த்தியது.

இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-4, 21-5 என்ற செட் கணக்கில் மஹூர் ஷாஜாத் மற்றும் கஜாலா சித்திக் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இதனால் இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com