காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் நிது கங்காஸ், உதின் முகமது அரையிறுதி சுற்றுக்கு தகுதி

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
Image Courtesy : Twitter 
Image Courtesy : Twitter 
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடந்த ஆண்களுக்கான 59 கிலோபிரிவு குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் இந்தியாவின் ஹுஸாம் உதின் முகமது ,நமீபியாவின் ட்ரைகெய்ன் மார்னிங்கை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றோரு போட்டியில் மகளிருக்கான 45 - 48 கிலோ பிரிவில் காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்,நார்த் அயர்லாந்தின் நிக்கோல் கிளைடை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com