காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : சத்யன்- மணிகா பத்ரா இணை அடுத்த சுற்றுக்கு தகுதி

இந்திய இணை சத்யன் - மணிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
Image Tweeted By @Media_SAI
Image Tweeted By @Media_SAI
Published on

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி சிந்து மற்றும் ஆண்கள் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதே போல் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் - மணிகா பத்ரா இணை தங்கள் முதல் சுற்று போட்டியில் மிக் கிரியா/லாரா சினோன் இணையை எதிர்கொண்டனர்.

இந்த போட்டியில் இந்திய இணை சத்யன் - மணிகா பத்ரா 11-1, 11-3, 11-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com